தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Saturday, March 24, 2012

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு 25 டன் அரிசி, உணவு பொருட்கள் வழங்கல்!

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு கடலோர மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 25 டன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கூடன்குளம் அனுமின் நிலைய பிரச்சனையில் இடிந்தகரை பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேறவும் புதிய நபர்கள் உள்ளே செல்லமுடியாத வகையிலும் அங்குள்ள முக்கிய வழிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பால், மருந்து. உணவு பொருட்கள் போன்றவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதற்காக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து 25 டன் அரிசி மற்றும் காய்கறிகள், மருந்து பொருட்கள், மளிகைபொருட்கள் போன்றவை அனுப்பபட்டன. இவை அனைத்தும் தூத்துக்குடி மாதா ஆலயத்தில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு வீராங்கணை அமைப்பு இயக்குநர் பாத்திமாபாபு தலைமை வகித்தார். கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் சுபாஷ் பர்னாந்து, பெரியார் திராவிடர் கழகம் பால் பிரபாகரன், நாட்டுப்படகு மீனவர் சங்கம் தலைவர் ராபர்ட், விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் தலைவர் பார்த்திபன், நாம் தமிழர் இயக்கம் ஜெயசீலன், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் தமிழரசன், புரட்சிகர இளைஞர் முண்ணனி சுஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News Source : Tutyonline.net

1 comments

Anonymous

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்..

இன்னும் நம்மூர் செய்திகள் நிறைய பகிர்ந்துகொண்டால் புலம்பெயர் பட்டணத்தாருக்கு உபயோகமாயிருக்கும்..

மீண்டும் வாழ்த்துக்கள்...

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top