தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Tuesday, June 12, 2012

சுயதொழில்-கடல்பாசி வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!

தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 22-ம் தேதி நடைபெற இருக்கும் கடல்பாசி வளர்ப்பு பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி தருவைகுளம் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குநர் (பொறுப்பு) மு.வெங்கடசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் ஜூன் 22-ம் தேதி கடல்பாசி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.இந்தப் பயிற்சியில் கடற்பாசி வளம், கடற்பாசிகளை வளர்ப்பதன் பயன்கள், வளர்ப்புக்கேற்ற கடற்பாசிகள், கடற்பாசி தரும் பொருள்கள், கடற்பாசி உணவுப் பண்டங்கள், கடற்பாசிகளின் பயன்கள், கடற்பாசி வளர்ப்பதற்கு உகந்த இடங்களைத் தேர்வு செய்யும் காரணிகள் குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.சுயதொழில் செய்ய விரும்புவோர், படித்து வேலையில்லா பட்டதாரிகள், ஆண் மற்றும் பெண் சுய உதவிக்குழுக்கள். படிப்பறிவு இல்லாதோர் கூட இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜூன் 21-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் 0461-2910336, 2340 576, 2340 554 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கடல்பாசி பற்றிய விவரம் அறிய இங்கே க்ளிக் குங்கள் 
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top