தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, July 27, 2011

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. வருகிற 5ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது.தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டிற்கான ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. பின்னர், கொடி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு. அங்கு கொடிக்கு ஆராதனைகள் செய்ய்பட்டது.பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வென் புறாக்களை பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்திலிருந்து சைரேன் ஒலிகள் எழுப்பப்பட்டன. அங்கு கூடியிருந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மரியே வாழ்க மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டனர். பின்னர்,காணிக்கையாக கொண்டு வந்த பால், பழங்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் இவோன் ஆம்புரோஸ், பனிமய மாதா ஆலய பங்கு தந்தை வில்லியம் சந்தாணம், உதவி பங்கு தந்தைகள் உபர்ட்டஸ், இன்பேண்ட் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், அதிமுக மாநகரச் செயலாளர் ஏசாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தூத்துக்குடி வந்துள்ளனர். வெளியூர் பயணிகளுக்கு தங்க இடவசதி இரண்டு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குதந்தை வில்லியம் சந்தானம், உபர்ட்டஸ், இன்பென்ட், மற்றும் அடைக்கல அன்னை அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துவருகின்றனர்.பணிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் உத்தரவின் படி, தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வடபாகம் இன்ஸ்பெக்டர் வீமராஜ் தலைமையில் 8 தனிப்படை போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலயத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Read More

மீனவர்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!!!

 தூத்துக்குடியில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாளை உடனே தவறாமல் நடத்த வேண்டும் என கடலோர மக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து கடலோர மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கை மனு விபரம்; 
புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்க வேண்டிய மீனவர் குறை தீர்க்கும் நாளை இது வரையிலும் நடத்தாமல் மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி திட்டமிட்டே தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
Read More

Friday, July 8, 2011

டிப்ளமோ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலை

அபுதாபியில் உள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு:அபுதாபியில் உள்ள ஒரு முன்னணி பைப் பிட்டிங் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப் மற்றும் பிளாஸ்டிக் அடிடிவ் அல்லது மாஸ்டர் பேட்சஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.45 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற லைன் (எக்ஸ்ட்ரூடர்) ஆபரேட்டர்கள், பட்டப்படிப்புடன் வேர்ஹவுஸ் பணியாளர்கள், ஸ்டோர் கீப்பர்கள் மற்றும் டிப்ளமோ பயின்று 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிப்ட் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் நல்ல ஊதியம், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் 11ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 & 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top