தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Thursday, July 26, 2012

பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


ஆன்மிக சிறப்புவாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தூத்துக்குடி மாநகரில் கடற்கரையோரம் அமைந்துள்ள 457 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய பனிமய மாதா கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருவதால் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சிறப்புபெற்றுள்ள தூய பனிமய மாதா ஆலயம் கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் நாள் பசிலிக்கா பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்ந்தது.
சிறப்புமிக்க தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பங்கு மக்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை மற்றும் கொடிபட்ட பேரணி பங்குதந்தை வில்லியம்சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் எளியோருக்கும், திருவழிபாடு, பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் பங்குமக்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை 6மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மேயர் சசிகலாபுஷ்பா, ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள், பங்குமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
பின்னர் மதியம் பேராயர் ஆன்ட்ரூ டிரோஸ் அடிகளார் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்குஇறை மக்களுக்கான திருப்பலியும், இரவு செபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 
விழாவில் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் 12மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் ஆடம்பரத் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை வில்லியம்சந்தானம், துணை பங்குத்தந்தை கிளைட்டன், களப்பணியாளர் பிளேவியன், பங்குபேரவையினர் மற்றும் பங்குஇறைமக்கள் செயது வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.,ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி., மகேஸ் தலைமையில் போலீசார் 24மணிநேரமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி : தினபூமி 
Read More

Tuesday, July 17, 2012

பட்டணத்தில் 60 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

17/07/2012 :
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,ல்
அனுமதியின்றி வழங்கிய 60 குடிநீர் இணைப்புகளை கலெக்டர் உத்தரவின் பேரில்
அதிகாரிகள் துண்டித்தனர்.
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் 60 குடிநீர் இணைப்புகள்
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கலெக்டரின் அனுமதியின்றி
பஞ்.,மூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார்
கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறியும் பணியில் கடந்த
வாரம் ஈடுபட்டனர். 
அதன் அடிப்படையில் சனிக்கிழமை திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
லீமாரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் ஆகியோர் திருச்செந்தூர்
தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ.,க்கள் சுப்புலெட்சுமி மற்றும் சத்தியபாமா
உட்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில்
ஈடுபட்டனர்.இந்நிலையில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,தலைவர் மாலாதேவி, பஞ்.,யூனியன் உறுப்பினர்
ஆனந்த்ரொட்ரிகோ, காயல்பட்டணம் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுநர் பொன்பாண்டியன்
ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர். அதற்கு கலெக்டர்
உத்தரவின் பேரிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top