திருச்செந்தூர், : திருச்செந்தூரில் விபத்து களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே திருநெல்வேலி சாலை சந்திக் கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. திருநெல்வேலி சாலையிலிருந்து திருச்செந்தூருக் குள் நுழையும்  வாகனங்கள் அரசு மருத்துவமனை சந்திப்பில் இடது மற்றும் வலது புறங்களில் வேகமாகத் திரும்புவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் திருநெல்வேலி சாலையிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு திரும்பும் பஸ்கள்  அதி வேகமாக இடதுபுறம் திரும்புவதால் ஆர்ச் பகுதியிலிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் மற்றும் வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் நிலைகுலைகின்றனர்.
இதேபோல் திருச்செந் தூர் தெப்பக்குளம் சந்திப்பு பகுதியிலும் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் வேக மாக வந்து நகருக்குள் நுழை வதால் அங்கும் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே அரசு மருத்துவ மனை மற்றும் தெப்பக்குளம் சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் உள்ள திருநெல்வேலி சாலை யிலும், தெப்பக்குளம் சந்திப்பில் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் செல்லும் சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more

தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும் என்று கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
அமலிநகர் பங்குதந்தை டிக்சன் வரவேற்றார். அடைக்கலாபுரம் அறநிலை அறக்கட்டளை இயக்குனர் செல்வராஜ், பாஜ நிர்வாகி ராஜலிங்கம், மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் மணவை கயஸ், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் தமிழினியன், விவசாயசங்கம் அருள்தாஸ், ஆலந்தலை ரமேஷ், அமலிநகர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.
பின்னர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக தரவேண்டும். மாற்று மின் திட்டங்களுக்கு தமிழக அரசு கோரியிருக்கும் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். 160 நாட்களுக்கு மேல் போராட்டம் நடந்தும் கூடங்குளம் பகுதி மக்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி மதிக்காமலும், அயல்நாட்டு பணம் வருகிறது எனவும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என்றார்.இதில் அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, கூடுதாழை, கூட்டப்பனை, சாயர்புரம் சுப்பிரமணியபுரம், கொம்புத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

Read more

தொப்பை குறைய........ என்னன்ன சாப்பிடலாம்?

Posted in Thursday, December 29, 2011
by Pattanam Port


இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்

Read more

திருச்செந்தூர்- சென்னை இடையே ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை- திருச்செந்தூர் இடையே வாரம் இருமுறை இயங்கி வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் விடக் கோரி

Read more

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. வருகிற 5ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது.தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டிற்கான ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. பின்னர், கொடி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு. அங்கு கொடிக்கு ஆராதனைகள் செய்ய்பட்டது.பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வென் புறாக்களை பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்திலிருந்து சைரேன் ஒலிகள் எழுப்பப்பட்டன. அங்கு கூடியிருந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மரியே வாழ்க மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டனர். பின்னர்,காணிக்கையாக கொண்டு வந்த பால், பழங்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் இவோன் ஆம்புரோஸ், பனிமய மாதா ஆலய பங்கு தந்தை வில்லியம் சந்தாணம், உதவி பங்கு தந்தைகள் உபர்ட்டஸ், இன்பேண்ட் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், அதிமுக மாநகரச் செயலாளர் ஏசாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தூத்துக்குடி வந்துள்ளனர். வெளியூர் பயணிகளுக்கு தங்க இடவசதி இரண்டு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குதந்தை வில்லியம் சந்தானம், உபர்ட்டஸ், இன்பென்ட், மற்றும் அடைக்கல அன்னை அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துவருகின்றனர்.பணிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் உத்தரவின் படி, தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வடபாகம் இன்ஸ்பெக்டர் வீமராஜ் தலைமையில் 8 தனிப்படை போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலயத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Read more

 தூத்துக்குடியில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாளை உடனே தவறாமல் நடத்த வேண்டும் என கடலோர மக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து கடலோர மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கை மனு விபரம்; 
புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்க வேண்டிய மீனவர் குறை தீர்க்கும் நாளை இது வரையிலும் நடத்தாமல் மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி திட்டமிட்டே தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

Read more

அபுதாபியில் உள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு:அபுதாபியில் உள்ள ஒரு முன்னணி பைப் பிட்டிங் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப் மற்றும் பிளாஸ்டிக் அடிடிவ் அல்லது மாஸ்டர் பேட்சஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.45 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற லைன் (எக்ஸ்ட்ரூடர்) ஆபரேட்டர்கள், பட்டப்படிப்புடன் வேர்ஹவுஸ் பணியாளர்கள், ஸ்டோர் கீப்பர்கள் மற்றும் டிப்ளமோ பயின்று 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிப்ட் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் நல்ல ஊதியம், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் 11ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 & 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Read more

நம்மில் சில பேர் கைப்பேசி ( ௦௦  ) வழியாக
இன்டர்நெட்  பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்...
அவர்களுக்காக சில உபயோகமான தகவல்கள் இதோ..எனக்கு தெரிந்த வரையில்...





மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும்.  
இது இருந்தால் தான் இன்டர்நெட் மொபைல் வழியாக உபயோகப்படுத்த முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இப்போது உங்கள் மொபைலில், Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதோ இந்த சுட்டி யை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

 பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில் கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு saveசெய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்



மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க 



முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection மூலம் இன்டர்நெட் கனக்ட் செய்து .  பிறகு கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாக படித்து தெரிந்துக் கொள்ளலாம்.   இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக  கிடைக்கிறது.



மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய
மேலே குறிப்பிட்டது போல செய்தித்தாள்களை உங்கள் மொபைலில் இருந்தே படிப்பது போல, தமிழிலேயே டைப் செய்யவும் வழி இருக்கிறது..
மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.





Read more

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top

Copyright 2010 @ Pattanam Port