தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, July 27, 2011

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. வருகிற 5ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது.தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டிற்கான ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. பின்னர், கொடி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு. அங்கு கொடிக்கு ஆராதனைகள் செய்ய்பட்டது.பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வென் புறாக்களை பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்திலிருந்து சைரேன் ஒலிகள் எழுப்பப்பட்டன. அங்கு கூடியிருந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மரியே வாழ்க மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டனர். பின்னர்,காணிக்கையாக கொண்டு வந்த பால், பழங்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் இவோன் ஆம்புரோஸ், பனிமய மாதா ஆலய பங்கு தந்தை வில்லியம் சந்தாணம், உதவி பங்கு தந்தைகள் உபர்ட்டஸ், இன்பேண்ட் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், அதிமுக மாநகரச் செயலாளர் ஏசாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தூத்துக்குடி வந்துள்ளனர். வெளியூர் பயணிகளுக்கு தங்க இடவசதி இரண்டு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குதந்தை வில்லியம் சந்தானம், உபர்ட்டஸ், இன்பென்ட், மற்றும் அடைக்கல அன்னை அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துவருகின்றனர்.பணிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் உத்தரவின் படி, தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வடபாகம் இன்ஸ்பெக்டர் வீமராஜ் தலைமையில் 8 தனிப்படை போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலயத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top