தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, September 25, 2011

செந்தூர் எக்ஸ்பிரஸ் 27ம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படும்: டி.ஆர்.பாலு தகவல்

திருச்செந்தூர்- சென்னை இடையே ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை- திருச்செந்தூர் இடையே வாரம் இருமுறை இயங்கி வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் விடக் கோரி
திருச்செந்தூர் பயணிகள் என்னிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று, வாரம் இருமுறை இயங்கி வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் தினசரி ரெயிலாக இயக்கப்படும்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரெயில் பாதையில் முதன் முறையாக மன்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னைக்கு செல்லும்.மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் நடக்கிறது. இந்த ரெயிலில் முதல் பயணியாக நான் செல்கிறேன். மன்னார்குடியில் இருந்து கன்னியாகுமரி, மேட்டுப்பாளையம், டெல்லி ஆகிய இடங்களுக்கும் ரெயில்களை இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஆர். பாலு எம்.பி. கூறினார்.செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். பின்னர் அந்த ரெயில் எழும்பூரில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூரை வந்தடையும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top