தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Thursday, April 28, 2011

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.


காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.

தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும்.

பேரீச்சம் பழத்தை

வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும்.

குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும்.

நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தெளிவடையும். உடலில் தசைப்பற்று உண்டாகும்.

பதநீர் குடித்தால் பற்களில் ஏற்படும் ஸ்கர்வி நோய் குணமாகும்.

பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும்.

பாலில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். எடை கூடும். சருமம் பளபளக்கும்.

கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். இதைப் போக்க தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தைப் பறித்து அதனுடன் துளசி இலைகள் மூன்றைச் சேர்த்து மென்று காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

சம்பா அரிசியை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தோலின் தன்மை மென்மையாக மாறுவதுடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கண்களில் குளிர்ச்சியை உண்டாக்க தாமரைப் பூவை கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொண்டால் போதும்.

இளநீரை தினமும் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும். உடல் சோர்வு அகலும்.

அதிகமாக உழைக்கும் மனித உறுப்புகளில் கண்களுக்கு பெரும் பங்கு உண்டு. கண்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் முதலில் அதற்கு ஓய்வு தேவை. எப்போதும் ஓய்வுக்குப் பின் புத்துணர்வு கிடைக்கும். கண்களின் வளமைக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும். மாதம் ஒரு முறை மெல்லிய மசாஜ் செய்யவேண்டும்.

பெண்கள் பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் வளமை பெறும்.

இளநீருடன் சந்தனத்தை சேர்த்து உடலில் தடவி குளித்தால் உடல் குளர்ச்சி ஏற்படும். கழிவு நீர் வெளியேறி விடும்.

தினமும் ஏதாவதொரு பழ ஜுஸ் அருந்தி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் கிடைக்கும்.

பிளம்ஸ் பழமும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

எலுமிச்சை சாறு தடவி ஊறிய பின் குளித்து வந்தால் சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

2 comments

Shobna

Very useful tips!!

AN Rayen May 7, 2011 at 11:28 AM

@Shobna
Thanks for your comments Sis...

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top