தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, April 24, 2011

தமிழில் டைப் செய்ய எளிய வழி...


அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.....
இந்த பதிவில் எனக்கு தெரிந்த ஒரு சிறிய விஷயம் உங்களோட பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்துருக்கள்(Fonts) இருந்தாலும் அதில் நமக்கு டைப் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அல்லது நமக்கு தமிழ் விசைப்பலகை (Tamil Keyboard) இருந்தாலும் அதில் எழுத்துக்களை தேடி தேடி டைப் செய்வதற்குள் நமக்கும் வயசாகிடும்,கம்ப்யூட்டருக்கும் வயசாகி விடும். நம்மில் பலபேர் Facebook,Google Talk போன்ற தளங்களில் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதுவதை பார்த்திருக்கிறோம். அதாவது “எப்படி இருக்கு” என்று கேட்பதற்கு “Eppadi Irukku” என்பது போல...மேலும் சில பேருக்கு தமிழில் கவிதையோ,கதையோ,கருத்துக்களோ எழுதுவதில் நமக்கு ஏற்படும் உணர்வுகளை இது போன்று எழுதும்போதும்,படிக்கும்போதும் நமக்கே கொஞ்சம் கடுப்பாக இருக்கும்....இதற்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக Google ஒரு அருமையான வழியை ஏற்படுத்தி இருக்கிறது...அதை தான் இந்த பதிவில் உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். இதைப்பற்றி நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம்...இருந்தாலும் இது இந்த வசதியை பற்றி தெரியாதவர்களுக்காக....

இதற்கு நீங்கள் முதலில் செய்யவேண்டியது

www.Google.com தளத்திற்கு சென்று அங்குள்ள Search Column -ல்
Google Tamil Transilation என்று டைப் செய்யுங்கள்...
உங்களுக்கு Result இப்படி கிடைக்கும், இதில் கீழே உள்ள படத்தில் காட்டியபடி, முதலில் வரும் Link ஐ கிளிக் பண்ணுங்கள். ( படங்களை பெரிதாக காண "right click"செய்து "Open link in new tab" கிளிக் பண்ணுங்க...வேறொரு புதிய பக்கத்தில் பெரிதாக காணலாம்..)
படம்-1







நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியுள்ள படி இருக்கும்...


படம்-2




படம் - 3


இதில் வலதுபக்கத்தில் இருக்கும்(சிவப்பு வட்டமிட்டுள்ள- 1 ) Language Option – ல், தமிழை தெரிவு செய்து, கீழே உள்ள எழுதுமிடத்தில், ஆங்கிலத்திலேயே எழுதினால் போதும்.. உதாரணமாக “நல்லா இருக்கு” என்பதற்கு “nallaa irukku” என்று ஆங்கிலத்திலேயே டைப் செய்தால் போதும்...நீங்கள் ஒரு வார்த்தை டைப் செய்து அடுத்த வார்த்தைக்கான Space தட்டும்போது அது தமிழில் மாறியிருக்கும். எழுதிய வார்த்தைகளை select செய்து copy செய்து நீங்கள் எழுத அல்லது இட வேண்டிய இடத்தில் paste செய்தால் போதும்.



இது நீங்கள் Internet connection –ல் இருக்கும்போது மட்டும் தான் செய்ய முடியும்...மேலும் உங்கள் connection speed குறைவாக இருந்தால் சொற்ப நேரம் எடுக்கும்....

இந்த குறையைப் போக்கவும் ஒரு வழியிருக்கிறது...

அதற்கு நீங்கள் இந்த applicatioan ஐ உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி விட்டால் (Install) அந்த குறையும் இருக்காது...Internet connection இருந்தாலும்,இல்லாவிட்டாலும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தமிழில் டைப் செய்ய முடியும்...எந்த ஒரு பைலிலும்(Word,,Excel,Power point) நீங்கள் டைப் செய்து கொள்ள முடியும்....

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.....

படம்- 3 ல் 2-வது வட்டமிட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் அல்லது
கீழே நான் கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.
http://www.google.com/ime/transliteration/
நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியுள்ள படி
இருக்கும்...அதில் சிவப்பு வட்டமிட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்..எந்த Folder-ல் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது இருக்கிறது என்று பார்த்து,அந்த file – ஐ கிளிக் பண்ணுங்கள்...









அப்போது கீழே கொடுத்துள்ளவாறு தோன்றும்...


அதில் “RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்...இந்த Application ஆனது உங்கள் கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்... இதை செய்வதனால் கம்ப்யூட்டருக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை.ஆதலால் பயப்பட வேண்டிய அவசியமில்லை..நீங்கள் டவுன்லோட் செய்யும்போது கீழ்கண்டவாறு செய்தி வரலாம்....


எனினும் நீங்கள் தைரியமாக இந்த Application - ஐ டவுன்லோட் Install செய்து கொள்ளலாம். Install செய்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar – ல், கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று இருக்கும், பின்னர் நீங்கள் அதில் கிளிக் செய்து மொழியை  select  செய்து டைப் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் இணைய இணைப்பு இருந்தாலும்,இல்லாவிட்டாலும் உபயோகபடுத்தி கொள்ளலாம்.  


அப்புறம் என்ன....உங்க கற்பனை குதிரையை தட்டி விடுங்க.... கவிதையோ,கட்டுரையோ,கதையோ, கிண்டலோ,கேலியோ, எதுவா இருந்தாலும் தமிழிலேயே எழுதி “Facebook- லயும்    Chat rooms – லயும் சும்மா கலக்குங்க......
All The Best…..

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துதுன்னா மறக்காம உங்க கருத்துக்களையும் பகிர்ந்துக்குங்க....

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top