தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Saturday, May 7, 2011

இணையதளத்தில் பதிவு செய்தால் பிளஸ் 2 ரிசல்ட்!

பொதுநூலக இயக்குநர் இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்துவைத்திருந்தால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முழுவதும் வரும் 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பல்வேறு இணையதளங்களில்
வெளியிடப்படுகின்றன.இந்நிலையில் சென்னை பொதுநூலக இயக்குநரின் இணையதளமான
http://tnpubliclibraries.gov.in/+2-results.html -ல் மாணவர்கள் தங்களுடைய பதிவெண், பெயர், முகவரி, செல்போன் நம்பர் ஆகிய விவரங்களை பதிவு செய்யும் பட்சத்தில் கட்டணம் ஏதுமின்றி மாணவர்களுக்கு தேர்ச்சி விவரம் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்களுடன் அனுப்பிவைக்கப்படும்.தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News : Tutyonline

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top