தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, June 26, 2011

கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்காக சில...(Some useful tips for Mobile Internet users)

நம்மில் சில பேர் கைப்பேசி ( ௦௦  ) வழியாக
இன்டர்நெட்  பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்...
அவர்களுக்காக சில உபயோகமான தகவல்கள் இதோ..எனக்கு தெரிந்த வரையில்...





மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும்.  
இது இருந்தால் தான் இன்டர்நெட் மொபைல் வழியாக உபயோகப்படுத்த முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இப்போது உங்கள் மொபைலில், Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதோ இந்த சுட்டி யை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

 பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில் கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு saveசெய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்



மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க 



முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection மூலம் இன்டர்நெட் கனக்ட் செய்து .  பிறகு கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாக படித்து தெரிந்துக் கொள்ளலாம்.   இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக  கிடைக்கிறது.



மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய
மேலே குறிப்பிட்டது போல செய்தித்தாள்களை உங்கள் மொபைலில் இருந்தே படிப்பது போல, தமிழிலேயே டைப் செய்யவும் வழி இருக்கிறது..
மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.





Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top