தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, March 28, 2012

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்கள்




ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன்,  இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளைநிலைப் பட்டம் அல்லது இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012
விவரங்களுக்கு: www.aai.aero 

நன்றி : புதிய தலைமுறை 
Read More

டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்



டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் (DRDO) நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கார்ப்பெண்டர், சி.என்.சி ஆபரேட்டர், டிராஃப்ட்ஸ்மேன்,  எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,  ஃபிட்டர், மெஷினிஸ்ட்,  மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2012
விவரங்களுக்கு: http://drdo.gov.in
நன்றி : புதிய தலைமுறை.
Read More

ரூ. 2 ஆயிரம் கட்டணத்தில் எம்பிபிஎஸ்


புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம் தில்லியில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டில் மேலும் 6  இடங்களில் இந்தக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்குக் கட்டணம் ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவு.


தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் தலை சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கனவு. நேருவின் முன் முயற்சியால் அன்றைய மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் 1956 ஆம் ஆண்டில் உருவானது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த ஏழு கல்வி நிறுவனங்களிலும் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 77 இடங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 11 இடங்களும் பழங்குடி இன மாணவர்களுக்கு 5 இடங்களும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 19 இடங்களும் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன. மத்திய அரசினால் பரிந்துரைக்கப்படும் 5 வெளிநாட்டவர்களுக்கும் இங்கு இடங்கள் அளிக்கப்படும். இந்திய பிரஜைகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் நிறுவனங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இங்குள்ள எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்கள் ஓராண்டு இன்டர்ன்ஷிப் உள்பட மொத்தம் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 17 வயதானவர்களாக (டிசம்பர் 31ம் தேதி அன்று) இருக்கவேண்டும். ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து இருக்கவேண்டும். பிளஸ் டூ தேர்வில் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடைசியாக அத்தேர்வை எழுதிய ஆண்டைக் குறிப்பிட வேண்டும். எம்ஸ் கல்வி நிறுவனங்களில் எந்தக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புகிறோம் என்பதையும் விண்ணப்பத்தில் வரிசைப் படுத்திக் குறிப்பிட வேண்டும்.

அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, டேராடூன், தில்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, ராய்ப்பூர் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வு மூன்றரை மணி நேரம் நடைபெறும். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில்  கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 கேள்விகளும், பொது அறிவுப் பாடத்தில் 20 கேள்விகளும் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. பிளஸ் டூ பாடத்திட்ட நிலையில் வினாக்கள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் என எதையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை. வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இருக்கும். எந்த மொழியில் வினாத்தாள் வேண்டும் என்பதை மாணவர்கள் விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பிறகு, அதை மாற்ற முடியாது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஸ் அட்மிஷன் பெற, பொதுப் பிரிவு மாணவர்கள் இந்த தேர்வில் குறைந்தது 50 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஓபிசி பிரிவு மாணவர்கள் குறைந்தது 45 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 40 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்ணயித்துள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.1628 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சோதனைக்குப் பிறகு தேர்வு செயப்பட்ட மாணவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விடுதிக் கட்டணமாக ரூ.4,228 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாற்றத்துக்கு உட்பட்டது. மத்திய அரசுக் கல்வி நிறுவனம் என்பதால் எம்பிபிஎஸ் படிப்புக்கு இந்த அளவு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.800. பாரத ஸ்டே வங்கிகளில் கம்ப்யூட்டர் சலான் மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி 2-4-2012
நுழைவுத் தேர்வு 1-6-2012
விவரங்களுக்குwww.aiims.ac.inwww.aiims.edu, www.aiimsexams.org


நன்றி : புதிய தலைமுறை 
Read More

Saturday, March 24, 2012

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு 25 டன் அரிசி, உணவு பொருட்கள் வழங்கல்!

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு கடலோர மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 25 டன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கூடன்குளம் அனுமின் நிலைய பிரச்சனையில் இடிந்தகரை பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேறவும் புதிய நபர்கள் உள்ளே செல்லமுடியாத வகையிலும் அங்குள்ள முக்கிய வழிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பால், மருந்து. உணவு பொருட்கள் போன்றவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதற்காக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து 25 டன் அரிசி மற்றும் காய்கறிகள், மருந்து பொருட்கள், மளிகைபொருட்கள் போன்றவை அனுப்பபட்டன. இவை அனைத்தும் தூத்துக்குடி மாதா ஆலயத்தில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு வீராங்கணை அமைப்பு இயக்குநர் பாத்திமாபாபு தலைமை வகித்தார். கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் சுபாஷ் பர்னாந்து, பெரியார் திராவிடர் கழகம் பால் பிரபாகரன், நாட்டுப்படகு மீனவர் சங்கம் தலைவர் ராபர்ட், விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் தலைவர் பார்த்திபன், நாம் தமிழர் இயக்கம் ஜெயசீலன், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் தமிழரசன், புரட்சிகர இளைஞர் முண்ணனி சுஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News Source : Tutyonline.net
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top