தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Friday, November 12, 2010

தூத்துக்குடியில் தொழில்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!


தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது, என் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்கள், தொழிற்பயிற்சி முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்திறன் படைத்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, அடுத்த மாதம் 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முன்னோடியாக, வேலைக்கு ஏற்ற தொழில் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு ஏதுவாக, வருகிற 22, 23-ந் தேதிகளில் தொழில் திறன் படைத்த, படித்த இளைஞர்கள் தங்களது கல்வித்தகுதி, வயது, விரும்பும் பணியிடம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன், சுயவிவர குறிப்புடன் நேரில் ஆஜராகி பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான தொழில்திறன் படைத்தவர்களை தங்களது நிறுவனத்துக்கு தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொழில் நிறவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் கல்வித்தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை வருகிற 26ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் 0461-2340152, 2340053 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, November 11, 2010

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ....


2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree)படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1.
சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்
பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006
மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.
இந்த கல்வி உதவி தொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும் உள்ளது.
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top