தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, December 1, 2010

திருச்செந்தூர் ரயிலில் நாசவேலை


திருச்செந்தூர் ரயிலில் நாசவேலை செய்தவர்கள் 

தொழில் நுட்பம் தெரிந்தவர்களே! 

பரபரப்பு தகவல்கள்!!

திருச்செந்தூர் இரயில் மர்ம நபர்கள் நாசவேலையால் என்ஜின் பழுதாகி நெல்லை செல்லாமல் நிறுத்தப்பட்டது. மேலும் நாசவேலையில் என்ஜின் தொழில்நுட்பம் தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.


திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு தினசரி காலை 7.20, மதியம் 2.20, மாலை 4.15 மற்றும் மாலை 6.00 மணிக்கு பயணிகள் இரயிலும், நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 7.10, காலை 9.35, பகல் 11.15 , 6.15 மணிக்கும், பயணிகள் இரயில் போக்குவரத்து நடக்கிறது. இது போக பிரதி வியாழன் தோறும் இரவு 7.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்கின்றது.

இன்று காலையில் வழக்கம் போல் திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் இரயில் (எண். 732) புறப்படுவதற்கு தயாராக உள்ளதா என்ற சோதனைக்காக என்ஜின் கேபினுக்குள் லோகோ பைலட் (இரயில் என்ஜின் டிரைவர்) மந்திரம் மற்றும் உதவியாளர் வெள்ளையன் ஆகியோர் முனைந்தனர். அப்போது தான் ரயில் இன்ஜினுடன் இணைந்த ஜெனரேட்டரிலிருந்து வரும் மின்சாரத்தை கட்டுப்டுத்தும் ஏசிசிஆர் என்ற கண்ட்ரோல் கேபிளை யாரோ மர்மநபர்கள் கழற்றிப் போட்டிருப்பது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக லோகோ பைலட்கள் ரயில்வே நிலையம், நிலையத்துடன் இணைந்திருக்கும் ரயில்வே போலீஸ் ஸ்டேசன், மற்றும் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தென்னக ரயில்வே தலைமையகத்திற்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் அங்குள்ள அதிகாரிகள் இரயில் என்ஜினை பழுதுபார்க்க ஆள்வரும் வரை நிறுத்திவைக்குமாறு அதிகாரிகள் ஆணையிட்டனர். 

தகவலின் பேரில் திருநெல்வேலி இரயில்வே கோட்ட காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், மற்றும் திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் இசக்கி உள்ளிட்டோர் இரயில் என்ஜினை பார்வையிட்டும், கைரேகை நிபுணர்கள் வந்து சோதனையும் செய்தனர். இரயில் நிலையத்திலும தீவிர சோதனை செய்யப்பட்டது.

விசாரணை துவக்கத்திலே மர்ம நபர்கள் இரயில் என்ஜின் கேபினுக்குள் நுழைந்து ஏசிசிஆர் இணைப்பை ஸ்பேனர் கொண்டுதான் கழற்றி உள்ளது தெரியவந்தது. எனவே தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியது. முர்மநபர்கள் நாசவேலை மூலம் இரயில் என்ஜினை பழுது செய்ய முயற்சித்தது இரயிலை நிறுத்தவா அல்லது திருடத்தானா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றது.

எல்லாவற்றையும் விட இரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு முன்பு தான் இந்த இரயில் என்ஜின் நிறுத்தப்பட்டிருந்ததும், பாதுகாப்பு பணியில் இரண்டு போலீசார் ஈடுபட்டிருந்த வேளையில் கூட சம்பவம் நடந்ததுதான் மிக்க வேடிக்கையாக உள்ளது.

தினசரி காலையில் நெல்லை செல்லும் இந்த இரயிலில் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் பணிக்குச் செல்பவர்கள் என ஒரு கூட்டமே நாள்தோறும் பயணிக்கும்.. திடீரென ஏற்பட்ட இரயில் என்ஜின் பழுதால் இரயிலானது நிறுத்தப்பட்டதால் வழக்கமான பயணிகள் அனைவரும் பெரிதும் ஏமாற்றத்துடன் இரயில்நிலையத்திலிருந்து திரும்பிச் சென்றனர். 

மேலும் இந்த இரயிலானது நெல்லைக்குச் சென்று அங்கிருந்து காலை 9.30 மணிக்கு மீண்டும் திருச்செந்தூருக்கு புறப்படுவதும் தடைபட்டதால், சென்னையிலிருந்து நெல்லைக்கு வரும் பயணிகள் திருச்செந்தூருக்கு வழக்கமாக இந்த இரயிலில் வருவதும் தடைபட்டது.

இதே போல் கடந்த 2008-ம் ஆண்டும் மர்மநபர்கள் ரயில் என்ஜின் கேபிள்களை அறுத்திருந்தனர். அச்சம்பவம் தொடர்பானவர்கள் இதுவரையும் கைது செய்யப்படாத வேளையில் மீண்டும் ஒரு நாசவேலை நடந்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது
Read More

Friday, November 12, 2010

தூத்துக்குடியில் தொழில்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!


தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது, என் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்கள், தொழிற்பயிற்சி முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்திறன் படைத்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, அடுத்த மாதம் 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முன்னோடியாக, வேலைக்கு ஏற்ற தொழில் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு ஏதுவாக, வருகிற 22, 23-ந் தேதிகளில் தொழில் திறன் படைத்த, படித்த இளைஞர்கள் தங்களது கல்வித்தகுதி, வயது, விரும்பும் பணியிடம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன், சுயவிவர குறிப்புடன் நேரில் ஆஜராகி பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான தொழில்திறன் படைத்தவர்களை தங்களது நிறுவனத்துக்கு தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொழில் நிறவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் கல்வித்தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை வருகிற 26ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் 0461-2340152, 2340053 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, November 11, 2010

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ....


2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree)படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1.
சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்
பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006
மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.
இந்த கல்வி உதவி தொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும் உள்ளது.
Read More

Monday, October 25, 2010

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை செய்யப்பட்ட பள்ளிகள் விபரம்!

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில், கமிட்டி கேட்ட விவரம் தராத 27 பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10934 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் வந்தது. இதன்பேரில் கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மூலம் 2009 டிசம்பர் மாதம் 10934 பள்ளிகளின் விவரங்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை 6400 பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அந்த கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தன.

கமிட்டி கேட்ட போதிய விவரங்களை அளிக்காத 533 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. கமிட்டியில் இருந்து எழுத்துபூர்வமாக தகவல் வரும் வரை மேற்கண்ட 533 பள்ளிகள் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 27 பள்ளிகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்ட பள்ளிகள்:

மெகாவாய் பள்ளி - ஓட்டப்பிடாரம், மணல்மாதா மேல்நிலைப்பள்ளி - சொக்கன்குடியிருப்பு, திருஅருள் மேல்நிலைப் பள்ளி - குலசேகரன்பட்டினம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்செந்தூர், முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி - சில்லான்குளம், ஷ்யாமளா மேல்நிலைப் பள்ளி - இலுப்பையூரணி, இந்து பிரைமரிப் பள்ளி - உடன்குடி, காமராஜ் நர்சரி & பிரைமரி - தூத்துக்குடி, ஆர்சி நடுநிலைப் பள்ளி - புதியம்புத்தூர், செந்தில் ஆண்டவர் நடுநிலைப் பள்ளி - உடன்குடி, இந்து நடுநிலைப் பள்ளி - சொக்கலிங்கபுரம், ஜோசப் நடுநிலைப் பள்ளி - செட்டிவிளை, தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி - தூத்துக்குடி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - புதுக்கோட்டை, சிவந்தி ஆதித்தனார் பள்ளி - திருச்செந்தூர், புனித அனீஸ் பள்ளி - உடன்குடி, ஹோலிகிராஸ் பிரைமரி ஸ்கூல் - மனப்பாடு, புனித அனீஸ் பள்ளி - தட்டார்மடம், இந்து நடுநிலைப் பள்ளி - பெருங்குளம், புனித ஜோசப் பள்ளி - கோவில்பட்டி, விஸ்வகர்மா மேல்நிலைப் பள்ளி - கோவில்பட்டி, வள்ளிமுத்து மேல்நிலைப்பள்ளி - கோவில்பட்டி, ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளி - திருச்செந்தூர், சி.எம். மேல்நிலைப் பள்ளி - தூத்துக்குடி, பாத்திமா நடுநிலைப் பள்ளி - தூத்துக்குடி, ஜார்ஜ் மெமொரியல் பள்ளி - தூத்துக்குடி, இந்து உயர்நிலைப் பள்ளி - பூச்சிக்காடு.
Read More

Monday, October 11, 2010

மீண்டும் ஒரு வாய்ப்பு.....

Read More

Sunday, October 10, 2010

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!


தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
Read More

Saturday, August 21, 2010

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி


மகளிர் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 25ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பம் செய்யுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
Read More

Tuesday, August 17, 2010

புனித தோமையார் மக்கள் நல சங்கத்தின் அறிவிப்பு

Read More

பட்டணத்தில் வாறுகால் அமைக்கும் பணி

Read More

Monday, August 16, 2010

ஜுபிலி ஆண்டு கொடியேற்றம்





புனித கன்னிமரியாளின் விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 15 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலி முடிந்தவுடன்,பரலோக அன்னையின் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. மேலும்  புனித தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு, 125 வது ஜுபிலி ஆண்டின் தொடக்கமாக, பங்குத்தந்தை.திரு.ஜோசப் அடிகளார் ஜுபிலி கொடியினை ஏற்றினார்.
அதன் பின்னர்
Read More

Sunday, July 11, 2010

இயேசுவின் திரு இருதய கொம்பீரிய சபை திருவிழா-video

நேற்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட இயேசுவின் திரு இருதய கொம்பீரிய சபை திருவிழா,நற்கருணை பவனியின் வீடியோ....
Read More

Sunday, June 27, 2010

புனித ஞானபிரகாசியார் சபை திருவிழா

 
நமதூர் பங்கிலுள்ள இளைஞர்களின் சபையான புனித ஞானபிரகாசியார் சபையின் 
ஆண்டு விழா நேற்று (27-6-10/ஞாயிற்றுகிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்குதந்தையர்கள் அருட்திரு ஜோசப் அடிகளார்,அருட்திரு.ராஜன் அடிகளார்,திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்ற,
Read More

திருச்சபையின் இளைஞர் ஆண்டு


கடந்த ஆண்டை குருக்கள் ஆண்டாக சிறப்பித்த நமது திருச்சபை,இனி வரும் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று
Read More

Saturday, June 5, 2010

செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி - புதிய கட்டிடம் திறப்பு

ஜூன் -௨
நமதூரில் காயல்பட்டணம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியின் புதிய கட்டிடத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு.இவான் அம்புரோஸ் அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இதில் நமதூர்
Read More

Monday, May 24, 2010

புதிய பங்குதந்தைக்கு வரவேற்பு

மே-23 :

கடந்த மாதங்களில் நமதூர் பங்கில் பணியாற்றிய அருட்திரு.செட்ரிக் பீரிஸ் அடிகளார் மாற்றலாகி செல்வதால், புதிதாக நம் பங்கில் பதவியேற்கும் அருட்திரு.ஜோசப் அடிகளார் அவர்களுக்கு
Read More

Sunday, May 23, 2010

நமதூரில் ஐவர் கால்பந்தாட்டப் போட்டி துவக்கம்

நமதூரை சார்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் குழு சார்பாக,12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான (நமதூர் மாணவர்கள் மட்டும்) உள்ளூர் அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
Read More

புதிய துணை பங்குத்தந்தை பதவியேற்பு

நமதூரில் கடந்த ஒரு வரு காலமாக உதவி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்திரு.ஜோ அடிகளார் அவர்கள் தூத்துக்குடி  துறைமுக
Read More

+2 தேர்வில் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

 2009-10 ம் ஆண்டிற்கான +2 தேர்வு முடிவுகள் மே 15 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் நமதூரின் தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி மாணவ,

Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top