தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Friday, March 25, 2011

பயனுள்ள கத்தோலிக்க தளங்கள் - பதிவு-1


வணக்கம்,
தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போது நமதூர் செய்திகளை வழங்கமுடிவதில்லை.எனினும் இந்த தளத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்..
         அதிக வேலைப்பளுவிற்கு இடையிலும், தனது நேரத்தை ஒதுக்கி,www.pattanam.com  மூலம் நமதூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, உலகளவில் பரந்து நிற்கும் நமதூர் உறவுகளுக்காக ஒரு சிறப்பான சேவையை செய்து வரும்  நண்பர்.திரு.அமுதன் பீரிஸ் அவர்களுக்கு நமது நன்றிகளும்,பாராட்டுக்களும்.....அவரது இந்த சேவைப்பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள். 
எனது இந்த தளத்தை ஆரம்பித்ததன் நோக்கம் நமதூர் செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,எனக்குள்ள ஒரு ஆர்வத்தினை சரிவர பயன்படுத்தவும் தான்...தற்போது என்னால் செய்திகள் தான் சரிவர வழங்க முடிவதில்லை எனினும் சில பயனுள்ள தகவல்களை இந்த தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் என்ன என்று யோசித்ததன் விளைவு தான் இந்த பதிவு....
              முதலில் இணையத்தில் மிக சிறப்பாக இறைப்பணி செய்யும் சில
Read More

Sunday, March 13, 2011

திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டி?

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் சரத்குமார் போட்டியிடுகிறார் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி அதிமுக, திமுக, தலைவர்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்மரமாக உள்ளனர்.சமத்துவ மக்கள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி என்று பரபரப்பான நிலையில் பேசிக் கொண்டிருந்த நிலையில், நாடார் கூட்டமைப்புகள் ஒன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று புதிய இயக்கத்தை ஆரம்பித்து, அதற்கு தலைவராக சரத்குமாரை நியமனம் செய்தனர்.சரத்குமார் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதியில் போட்டியிட சரத்குமார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  இதனால் நாடார் கூட்டமைப்பு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் சரத்குமார் கூட்டணி வைக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாம். இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். இதில் சரத்குமார் போட்டியிட வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்று கூறப்படுகிறது.ஏனென்றால், அதிமுகவை விட்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.ஆக உள்ளார். அவருக்கே மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட இருக்கிறதாம். இதனால் அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடிக்கவே, சரத்குமாரை களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.நாடார்கள் அதிகமுள்ள திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரை நிறுத்தியும், எப்படியும் அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடித்து விடலாம் என்று அதிமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியும் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு எர்ணாவூர் நாராயணன் அல்லது கரு.நாகராஜன் ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


News Source : Tutyonline
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top