தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Monday, October 25, 2010

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை செய்யப்பட்ட பள்ளிகள் விபரம்!

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில், கமிட்டி கேட்ட விவரம் தராத 27 பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10934 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் வந்தது. இதன்பேரில் கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மூலம் 2009 டிசம்பர் மாதம் 10934 பள்ளிகளின் விவரங்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை 6400 பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அந்த கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தன.

கமிட்டி கேட்ட போதிய விவரங்களை அளிக்காத 533 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. கமிட்டியில் இருந்து எழுத்துபூர்வமாக தகவல் வரும் வரை மேற்கண்ட 533 பள்ளிகள் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 27 பள்ளிகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்ட பள்ளிகள்:

மெகாவாய் பள்ளி - ஓட்டப்பிடாரம், மணல்மாதா மேல்நிலைப்பள்ளி - சொக்கன்குடியிருப்பு, திருஅருள் மேல்நிலைப் பள்ளி - குலசேகரன்பட்டினம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்செந்தூர், முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி - சில்லான்குளம், ஷ்யாமளா மேல்நிலைப் பள்ளி - இலுப்பையூரணி, இந்து பிரைமரிப் பள்ளி - உடன்குடி, காமராஜ் நர்சரி & பிரைமரி - தூத்துக்குடி, ஆர்சி நடுநிலைப் பள்ளி - புதியம்புத்தூர், செந்தில் ஆண்டவர் நடுநிலைப் பள்ளி - உடன்குடி, இந்து நடுநிலைப் பள்ளி - சொக்கலிங்கபுரம், ஜோசப் நடுநிலைப் பள்ளி - செட்டிவிளை, தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி - தூத்துக்குடி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - புதுக்கோட்டை, சிவந்தி ஆதித்தனார் பள்ளி - திருச்செந்தூர், புனித அனீஸ் பள்ளி - உடன்குடி, ஹோலிகிராஸ் பிரைமரி ஸ்கூல் - மனப்பாடு, புனித அனீஸ் பள்ளி - தட்டார்மடம், இந்து நடுநிலைப் பள்ளி - பெருங்குளம், புனித ஜோசப் பள்ளி - கோவில்பட்டி, விஸ்வகர்மா மேல்நிலைப் பள்ளி - கோவில்பட்டி, வள்ளிமுத்து மேல்நிலைப்பள்ளி - கோவில்பட்டி, ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளி - திருச்செந்தூர், சி.எம். மேல்நிலைப் பள்ளி - தூத்துக்குடி, பாத்திமா நடுநிலைப் பள்ளி - தூத்துக்குடி, ஜார்ஜ் மெமொரியல் பள்ளி - தூத்துக்குடி, இந்து உயர்நிலைப் பள்ளி - பூச்சிக்காடு.
Read More

Monday, October 11, 2010

மீண்டும் ஒரு வாய்ப்பு.....

Read More

Sunday, October 10, 2010

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!


தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top