தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, January 23, 2011

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:

01:செருப்புக்கடி புண்ணுக்கு
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.


02:மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில்
தடவ உடன் பலன் கிடைக்கும்.


03:புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்
1.
ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
2.
எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.


04:பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்
கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.


05:காதில், , எறும்பு நுழைந்துவிட்டால்
1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.
2.
சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.



06:உடன் தீப்பட்ட புண்ணுக்கு...
1.
தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.
2.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.
3.
ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.
4.
கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top