தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Thursday, November 11, 2010

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ....


2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree)படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1.
சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்
பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006
மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.
இந்த கல்வி உதவி தொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும் உள்ளது.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top