தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, February 27, 2011

தினந்தோறும் இனி செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடும்


தமிழகத்தின் நிறைய ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், இந்த பட்ஜெட்டில் சொற்ப அளவிலான சில விஷயங்கள் கிடைத்துள்ளது என்றே தெரிகிறது. ஒன்பது மின்சார ரயில்களும், ஒரு துரந்தோ ரயிலும், மதுரை - தூத்துக்குடி இடையில் புதிய ரயில் பாதைக்கான திட்டமும், சென்னை - தூத்துக்குடி இடையில் தினந்தோறும் ரயில் இயக்குவது உள்ளிட்ட விஷயங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.


                                  பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஓடும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி கோல்கட்டாவுக்கு 50 மின்சார ரயில்களும், மும்பைக்கு 47 மின்சார ரயில்களும், செகந்திராபாத்துக்கு 10 மின்சார ரயில்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னைக்கு அளிக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை ஒன்பது மட்டுமே. இந்த ரயில்கள் சென்னை பீச் - கும்மிடிப்பூண்டி, எண்ணூர் - கும்மிடிப்பூண்டி, ஆவடி - பீச், சென்ட்ரல் - திருவொற்றியூர் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும். தவிர, இதுவரை தாம்பரம் வரை இயக்கப்பட்ட ரயில்கள் இனி செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.மதுரை - சென்னை இடையே துரந்தோ எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படும். இது வாரம் இரு முறை இயக்கப்படும். சென்னை - திருவனந்தபுரம் இடையில் மற்றொரு துரந்தோ எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். இதுவும் வாரம் இரு முறை இயக்கப்படும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சதாப்தி ரயில்களில் தமிழகத்திற்கு எதுவும் இல்லை.விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நான்கு ரயில்கள் அறிமுகமாகின்றன. அதில் குஜராத் துவாரகா - தூத்துக்குடி இடையிலும், அசாம் திப்ரூகர் - கன்னியாகுமரி வழி திருவனந்தபுரம் இடையிலும் இரண்டு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜனம்பூமி கவுரவ் என்ற பெயரில் நான்கு ரயில்கள் அறிமுகமாகின்றன. அதில், சென்னை - புதுச்சேரி - திருச்சி - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - சென்னை ஆகிய மார்க்கத்தில் ஒரு ரயில் இயக்கப்படும்.

நேற்றைய பட்ஜெட்டில் மொத்தம் 56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகமாகியுள்ளன. அதில், தமிழகத்துக்கு என ஆறு ரயில்கள் கிடைத்துள்ளன.
1. சென்னை - ஷீரடி இடையே பெங்களூரு வழியாக வாரம் ஒருமுறை ரயில்.
2. கோவை - தூத்துக்குடி இடையில் தினந்தோறும் இணைப்பு ரயில்.
3. மைசூரு - சென்னை இடையில் வாரம் ஒருமுறை ரயில்.
4. மேற்கு வங்கம் புரூலியா - விழுப்புரம் இடையே வேலூர் வழியாக வாரம் ஒருமுறை ரயில்.
5. மேற்கு வங்கம் கரக்பூர் - விழுப்புரம் இடையே வேலூர் வழியாக வாரம் ஒருமுறை ரயில்.
6. டில்லி - புதுச்சேரி இடையில் வாரம் ஒருமுறை ரயில்.

புதிய பாசஞ்சர் ரயில்கள் மொத்தம் 13 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தமிழகத்துக்கு ஒரு ரயில் கிடைத்துள்ளது.கோவை - மேட்டுப்பாளையம் இடையில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.மேலும், கொல்லம் - நாகர்கோவில் இடையில் இந்த சேவை ரயில் கிடைத்துள்ளது. "டிஇஎம்யூ' சேவையில் 22 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், தர்மபுரி - பெங்களூரு இடையில் இந்த சேவை ரயில் கிடைத்துள்ளது.தற்போதுள்ள ரயில்களை மேலும் நீட்டிக்கச் செய்ததில் 33 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் ஏற்கனவே எழும்பூரில் இருந்து நாகூர் வரையில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில், காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் வரை ஓடிக் கொண்டிருக்கும் ரயில் இனி கொச்சுவெலி வரை நீட்டிக்கப்படும்.ரயில்கள் இயக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட விவரத்தின்படி தமிழகத்தில் சென்னை - தூத்துக்குடி இடையில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டுக் கொண்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் இனி தினந்தோறும் இயக்கப்படும். திருச்சி - கரூர் இடையில் ஆறு நாட்கள் இயக்கப்பட்டிருந்த ரயில் இனி தினந்தோறும் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் 

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top