தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Saturday, January 29, 2011

அரசின் கல்வி உதவி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
ஒரு குடும்பத்தில் பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல் நகல் (xerox)
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் : 
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை ,இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும்தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

11, 12 , ITI, டிப்ளமோஆசிரியர் பயிற்சிபட்ட படிப்புபட்ட மேற்படிப்புஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% 
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல்
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை ,புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும்தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல்
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26கூடுதல் தகவல்கள் :
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form)விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை ,புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top