தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Useful Websites








இந்த தளத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்..
         அதிக வேலைப்பளுவிற்கு இடையிலும், தனது நேரத்தை ஒதுக்கி,www.pattanam.com  மூலம் நமதூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, உலகளவில் பரந்து நிற்கும் நமதூர் உறவுகளுக்காக ஒரு சிறப்பான சேவையை செய்து வரும்  நண்பர்.திரு.அமுதன் பீரிஸ் அவர்களுக்கு நமது நன்றிகளும்,பாராட்டுக்களும்.....அவரது இந்த சேவைப்பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.
எனது இந்த தளத்தை ஆரம்பித்ததன் நோக்கம் நமதூர் செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,எனக்குள்ள ஒரு ஆர்வத்தினை சரிவர பயன்படுத்தவும் தான்...தற்போது என்னால் செய்திகள் தான் சரிவர வழங்க முடிவதில்லை எனினும் சில பயனுள்ள தகவல்களை இந்த தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் என்ன என்று யோசித்ததன் விளைவு தான் இந்த பதிவு....
              முதலில் இணையத்தில் மிக சிறப்பாக இறைப்பணி செய்யும் சில
தளங்களை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன்...

உங்களுக்கு நன்கு பரிச்சயமான www.manavai.com , போன்று பல கத்தோலிக்க தளங்கள் தமிழிலேயே இருக்கின்றன....இதோ அந்த தளங்கள்....


அன்பின் மடல். 
இந்த தளத்தில் அருமையான பல கட்டுரைகள்,புனிதர்களை பற்றிய தகவல்கள், பாடல்கள் கேட்க,தரவிறக்கம் (download) செய்ய என்று பலவாறான விஷயங்கள் கிடைக்கின்றன..மேலும் ஞாயிறு வாசகங்கள்,வாடிகன் ரேடியோ என்று பல சிறப்புகள் உண்டு...கீழே உள்ள படத்தை கிளிக் செய்து,இந்த தளத்திற்கு சென்று பயனடையுங்கள்..





பைபிள் இன் தமிழ் 
இந்த தளத்தில் பல பாடல்கள் கேட்கலாம், தரவிறக்கலாம்...ஆன்லைனில் விவிலியமும் வாசிக்கலாம், திருப்பலி பாடல்கள்,மாதா பாடல்கள்,தவக்கால பாடல்கள் என்று பல பிரிவுகளில் பாடல்களை வழங்குகிறார்கள். விவிலியத்தை நாம் mp3 audio  மூலம் ஆன்லைனில் கேட்கலாம்.
விவிலிய கல்வி,வினாடிவினா, மறையுரை,கட்டுரைகள் என சிறப்புக்களும் உண்டு.. 
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள் 



அருள்வாக்கு......
இது ஒரு அருமையான தளம். திருப்பலியை நீங்கள் ஆடியோ வடிவில் கேட்க வழி செய்கிறது இந்த தளம். மேலும் திருப்பலிக்கான  மறையுரையும்,பாடல்களும்,பாடல் வரிகளும் (Lyrics)  இருக்கின்றன. சில பாடல்களுக்கான காணொளியும் (video)  கண்டு மகிழலாம். இந்த தளம் நமது கைப்பேசிக்கு (mocile phone) விவில்ய வாசகங்களை பெரும் வசதியும் தருகிறது...நீங்கள் விரும்பினால் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்..
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.






தமிழ் கத்தோலிக்.
இந்த தளமானது நமக்கு ஜெபங்கள் மற்றும் பாடல் வரிகள், திருப்பலி பாடல்கள் ஆகியவைகளை தருகிறது....இது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு தமிழ் தளம்...
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்..


தமிழ் கிறிஸ்டியன்


 இந்த தளத்தில் நவநாள் ஜெபங்கள்,புனிதர்களை பற்றிய வரலாறு, ஆலயங்களை பற்றிய தகவல்கள்,பாடல் வரிகள்,கட்டுரைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.

அருளோசை

ஞாயிறு வாசகம் மற்றும் மறையுரை,பல குறிப்புகள்.,கட்டுரைகள் இங்கே வெளியிடப்படுகின்றன.
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்
ஒளிரும் இறைவன்

இந்த தளத்தில் ஆன்மீக கட்டுரைகள்,விவிலிய விளக்கங்கள்,இன்னும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் இரைந்து கிடக்கின்றன. இது ஒரு Blogspot  போன்ற ஒரு தளம்...கட்டுரைப்பிரியர்களுக்கு ஒரு அருமையான தளம்...
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்

ஜெபமாலை

ஆன்மீக கட்டுரைகள்,புனிதர்களை பற்றிய வரலாற்று தகவல்கள், மாதாவின் வாழ்க்கை வரலாறு என்று பல தகவல்கள் இந்த தளத்தில்....
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்

தினமும் திருப்பலி காண

உலகத்தில் விஞ்ஞான வளர்ச்சி நமக்கு எப்படி எல்லாம் ஆச்சர்யமளிக்கிறது. பாருங்கள். சவுதிஅரேபியா போன்ற சில நாடுகளில், ஏன் நம் இந்தியாவிலேயே, திருப்பலி காண முடியாத சில இடங்களும் இருக்கின்றன. அத்தகைய சூழலில் இருப்போர்க்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்...
தினமும் திருப்பலி ஆன்லைனில் காணலாம்..ஆனால் ஆங்கிலத்தில்....
இதில் இன்னொரு சிறப்பு நவநாள் ஆராதனைகளிலும் நாம் ஆன்லைனில் பங்கு கொள்ளலாம்....ஆசையாய் இருக்கிறதா?

பைபிள் ஒலி வடிவில் கேட்க

தினமும் விவிலியம் படித்து விட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்...இதோ நீங்கள் உங்கள் செவிகளால் அதை கேட்டு மகிழலாம்...தமிழ்,ஆங்கிலம்,பஞ்சாபி,உருது என பல மொழிகளில்,பைபிளை MP3 ஆடியோ வடிவில் நமக்கு தருகிறார்கள். தரவிரக்கமும் செய்து கொள்ளலாம்...

Turn Back to God 
இந்த தளம் ஒரு அருமையான தளம்....எனக்கு பிடித்த தளமும் கூட...பாடல்கள்,(தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு..),கட்டுரைகள், படங்கள்,கதைகள்,திரைப்படங்கள்,கவிதைகள்,என பல விஷயங்கள் இருக்கின்றன...மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கிறிஸ்தவ இணையதளம்...நீங்களே உணர்வீர்கள்

.இன்னும் சில இணையதளங்கள் கீழே...


மேலும் நம் கத்தோலிக்க ஆலயங்களை தகவல்களை உள்ளடக்கிய ஒரு தளமுமிருக்கிறது...நம் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்கள்,பங்குகளை பற்றி அறிய இங்கே கிளிக் பண்ணுங்க...

அதில் நம்மூர் புனித தோமையார் ஆலயத்தை பற்றிய வரலாறு அறிய

முடிந்தவரை எனக்கு தெரிந்த,பிடித்த தளங்களை உங்களுக்கு மேலே கொடுத்துள்ளேன்.. அதற்குள்ள லிங்க் ஐ கிளிக் செய்து இந்த தளங்களுக்கு ஒரு விசிட் அடியுங்கள்...இந்த பதிவை பற்றியும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...




Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top