தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, January 22, 2012

தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்: கூடங்குளம் உதயகுமார் வலியுறுத்தல்

தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும் என்று கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
அமலிநகர் பங்குதந்தை டிக்சன் வரவேற்றார். அடைக்கலாபுரம் அறநிலை அறக்கட்டளை இயக்குனர் செல்வராஜ், பாஜ நிர்வாகி ராஜலிங்கம், மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் மணவை கயஸ், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் தமிழினியன், விவசாயசங்கம் அருள்தாஸ், ஆலந்தலை ரமேஷ், அமலிநகர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.
பின்னர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக தரவேண்டும். மாற்று மின் திட்டங்களுக்கு தமிழக அரசு கோரியிருக்கும் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். 160 நாட்களுக்கு மேல் போராட்டம் நடந்தும் கூடங்குளம் பகுதி மக்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி மதிக்காமலும், அயல்நாட்டு பணம் வருகிறது எனவும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என்றார்.இதில் அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, கூடுதாழை, கூட்டப்பனை, சாயர்புரம் சுப்பிரமணியபுரம், கொம்புத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top