தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Friday, March 25, 2011

பயனுள்ள கத்தோலிக்க தளங்கள் - பதிவு-1


வணக்கம்,
தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போது நமதூர் செய்திகளை வழங்கமுடிவதில்லை.எனினும் இந்த தளத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்..
         அதிக வேலைப்பளுவிற்கு இடையிலும், தனது நேரத்தை ஒதுக்கி,www.pattanam.com  மூலம் நமதூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, உலகளவில் பரந்து நிற்கும் நமதூர் உறவுகளுக்காக ஒரு சிறப்பான சேவையை செய்து வரும்  நண்பர்.திரு.அமுதன் பீரிஸ் அவர்களுக்கு நமது நன்றிகளும்,பாராட்டுக்களும்.....அவரது இந்த சேவைப்பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள். 
எனது இந்த தளத்தை ஆரம்பித்ததன் நோக்கம் நமதூர் செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,எனக்குள்ள ஒரு ஆர்வத்தினை சரிவர பயன்படுத்தவும் தான்...தற்போது என்னால் செய்திகள் தான் சரிவர வழங்க முடிவதில்லை எனினும் சில பயனுள்ள தகவல்களை இந்த தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் என்ன என்று யோசித்ததன் விளைவு தான் இந்த பதிவு....
              முதலில் இணையத்தில் மிக சிறப்பாக இறைப்பணி செய்யும் சில
தளங்களை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன்...
உங்களுக்கு நன்கு பரிச்சயமான www.manavai.com , போன்று பல கத்தோலிக்க தளங்கள் தமிழிலேயே இருக்கின்றன....இதோ அந்த தளங்கள்....

அன்பின் மடல். 
இந்த தளத்தில் அருமையான பல கட்டுரைகள்,புனிதர்களை பற்றிய தகவல்கள், பாடல்கள் கேட்க,தரவிறக்கம் (download) செய்ய என்று பலவாறான விஷயங்கள் கிடைக்கின்றன..மேலும் ஞாயிறு வாசகங்கள்,வாடிகன் ரேடியோ என்று பல சிறப்புகள் உண்டு...கீழே உள்ள படத்தை கிளிக் செய்து,இந்த தளத்திற்கு சென்று பயனடையுங்கள்..




பைபிள் இன் தமிழ் 
இந்த தளத்தில் பல பாடல்கள் கேட்கலாம், தரவிறக்கலாம்...ஆன்லைனில் விவிலியமும் வாசிக்கலாம், திருப்பலி பாடல்கள்,மாதா பாடல்கள்,தவக்கால பாடல்கள் என்று பல பிரிவுகளில் பாடல்களை வழங்குகிறார்கள். விவிலியத்தை நாம் mp3 audio  மூலம் ஆன்லைனில் கேட்கலாம்.
விவிலிய கல்வி,வினாடிவினா, மறையுரை,கட்டுரைகள் என சிறப்புக்களும் உண்டு.. 
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள் 



அருள்வாக்கு......
இது ஒரு அருமையான தளம். திருப்பலியை நீங்கள் ஆடியோ வடிவில் கேட்க வழி செய்கிறது இந்த தளம். மேலும் திருப்பலிக்கான  மறையுரையும்,பாடல்களும்,பாடல் வரிகளும் (Lyrics)  இருக்கின்றன. சில பாடல்களுக்கான காணொளியும் (video)  கண்டு மகிழலாம். இந்த தளம் நமது கைப்பேசிக்கு (mocile phone) விவில்ய வாசகங்களை பெரும் வசதியும் தருகிறது...நீங்கள் விரும்பினால் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்..
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.


தமிழ் கத்தோலிக்.
இந்த தளமானது நமக்கு ஜெபங்கள் மற்றும் பாடல் வரிகள், திருப்பலி பாடல்கள் ஆகியவைகளை தருகிறது....இது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு தமிழ் தளம்...
இந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்..

மேலே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்கள் கருத்தை எமக்கு எழுதுங்கள்...உங்கள் எண்ணங்களை,கருத்துக்களை, பின் வரும் "post a comment" பகுதியில் எழுதுங்கள்.வரும் நாட்களில் இன்னும் பல தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த காத்திருக்கிறேன். எழுத்துக்களில் ஏதேனும் தவறு இருப்பின் பொறுத்தருள்க.
(இன்னும் வரும்).

4 comments

Anonymous

All sites are very good and very useful. Thanks for the links and keep it up the good work.

Amuthan Peeris March 29, 2011 at 11:48 PM

Dear Nevison,
Thanks for the wonderful and very useful blog for all our patnathars. I'm sure everyone will benefit from this blog. And i'm very confident this will bridge the gap that we have in reading bible daily, saying our daily prayers and knowing the latest catholic news.
Wishing you all the best and awaiting more blogs from you,
Amuthan Peeris

நவராஜன் October 3, 2011 at 8:03 PM

நன்றி நண்பரே! அன்பின் மடல் இணையதளத்திற்கு தந்த ஆதரவுக்கு.

நவராஜன் -அன்பின் மடல்
சென்னை

நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ November 19, 2014 at 9:52 AM


அன்புடையீர்
வணக்கம்!
இந்தியக் கத்தோலிக்கத் தமிழ் ஞானகம் கடந்த 33 ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. அதற்கெனத் தனி இணையதளம் 2000 ஆண்டு சூபிலி விழாவின் போது உருவாக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக இயங்கிவருகிறது. அதனைக் காண இங்கே அழுத்தவும் : http://www.aumonerietamouleindienne.org
Benjamin LE BEAU
In-Charge of the Tamil chaplaincy website in Paris

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top